மலேசியாவில் நயனுக்கு முழு 'கட்'!

இப்போது மலேசிய தணிக்கைக் குழு, இந்தப் பாடலைப் பார்த்து மிரண்டு போய், முழுசாகவே வெட்டி எறியச் சொல்லி விட்டார்களாம்.
இந்தப் பாடல் காட்சி தவிர மேலும் 4 வன்முறை மிக்க மோசமான காட்சிகளுக்கும் வெட்டு கொடுத்துள்ளதாம் மலேசிய சென்சார் போர்டு.
மலேசிய கலாச்சாரத்துக்கு எதிராகவும், மக்கள் மனங்களைக் கெடுக்கும் விதமாகவும் அமைந்த ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மலேசிய சென்சார் போர்டு அதிகாரிகள் விளக்கமும் அளித்துள்ளனர்.
சத்யம் படம் நாளை மலேசியாவில் வெளியாகிறது. இதன் சிறப்புக் காட்சி இன்று இரவு கோலாலம்பூரில் நடக்கிறது. இந்தக் காட்சி முடிந்து நாளை சென்னை வரும் விஷால், நாளை இரவு சென்னையில் நடைபெறும் சத்யம் சிறப்புக் காட்சியிலும் பங்கேற்கிறார்.
சத்யம் படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.
ஏன் எடுக்கணும், எதற்கு வெட்டுப்படணும்?


Click it and Unblock the Notifications











