முரளி மகனும் ஹீரோ!

முரளியின் மகன் அதர்வா என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது அவரும் கதாநாயகனாக நடிக்க வந்துவிட்டார். சத்யராஜின் முன்னாள் மேனேஜர் ராமநாதனின் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் அதர்வா. பிரமிட் சாய்மிரா நிறுவனம் இந்தப் படம் தயாரிப்பதற்கான முழு நிதி உதவியையும் அளித்துள்ளது.
இப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார்.
விஷ்ணு சங்கரன் இயக்கவிருக்கும் இதன் தொடக்க விழா சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.
பிரபல இயக்குநரும் அதர்வாவின் தாத்தாவுமான சித்தலிங்கையா காமிராவை துவக்கி வைக்க, அதர்வா நடித்த முதல் காட்சியை தமிழ் திரையுலக ஜாம்பவான் பாரதிராஜா இயக்கினார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன், கே. பாக்யராஜ், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், கலைப்புலி தாணு, மனோரமா மற்றும் பலர் விழாவில் பங்கேற்று அதர்வாவை ஆசீர்வதித்தனர்.


Click it and Unblock the Notifications











