விருந்து மழையில் நனையும் 'மைனா'

By Sudha

பெருவாரியான பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் மைனா திரைப்படக் குழுவினர் இப்போது புதுமணத் தம்பதிகளைப் போல விருந்து நிகழ்ச்சிகளுக்கு உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கின்றனராம்.

தீபாவளிக்கு வந்த மைனா படம் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த நல்ல படங்களில் முதன்மையானது என்ற பெயரையும் அது வாங்கியுள்ளது. படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாலா என பல தரப்பினரின் பாராட்டுக்களை முதலிலேயே வாங்கி விட்டது மைனா. உச்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இப்படத்தை வாயார பாராட்டியுள்ளார். இப்படத்தில் நடிக்காமல் போய் விட்டேனே என்று வருத்தமும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விருந்து நிகழ்ச்சிகளில் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறதாம் மைனா படக் குழு.

இயக்குநர் பாலா மைனா படக் குழுவினரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து விருந்து படைத்து உற்சாகப்படுத்தி, தானும் மகிழ்ந்திருக்கிறார். அத்தோடு நில்லாமல் அத்தனை பேரோடும் நின்று ஒரு போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

மிகச் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது மைனா என்று இயக்குநர் பிரபு சாலமன், நடிகர்கள் விதார்த், தம்பி ராமையா, நாயகி அமலா பால் என அனைவரையும் பாராட்டித் தள்ளியுள்ளார் பாலா.

இந்த நிலையில் இன்னொரு வித்தியாசமான விருந்து நிகழ்ச்சி மைனாவைத் தேடி வந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூட்டை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர், டைரக்டர் பிரபுசாலமனிடம் போனில் பேசி, விருந்துக்கு அழைத்துள்ளார்.

இந்த அழைப்பை மைனா குழுவும் ஏற்று வருகிற 18ம்தேதி விருந்துக்காக கோயம்பேடு செல்கிறதாம்.

மைனாவுக்கு இப்படி அடுத்தடுத்து கிடைத்து வரும் பாராட்டுக்களையும், கெளரவங்களையும் நினைத்து தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளாராம். சிறிய நடிகர்கள் நடித்த படமாச்சே என்று யோசிக்காமல், நல்ல படம் என்று நினைத்து வாங்கியது மிகச் சரியான முடிவு என்று உதயநிதிக்கும் பாராட்டுக்கள் குவிகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X