பால் விளம்பரத்தில் நதியா

முன்னாள் ஹீரோயினான நதியா, சினிமாவில் வாய்ப்பிழந்த பின்னர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நடிக்க வந்தார்.
எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமியில், அம்மா வேடத்தில் வந்த அவர் அதன் பின்னர் தாமிரபரணியில் நடித்தார். இப்போது ஆரோக்யா பால் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடாரக மாறியுள்ளார்.
ஆரோக்யா பால் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக முன்பு ராதிகா இருந்தார். இப்போது அந்த இடத்திற்கு நதியா வந்துள்ளார். ஆரோக்யா பால் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ள நதியா, அந்த நிறுவனம் தயாரிக்கும் விளம்பரங்களில் நடிப்பார்.
முதல் கட்டமாக உலக மகளிர் தினத்தின்போது, நதியா நடித்த 3 விளம்பரங்களை இந்த நிறுவனம் வெளியிட்டது.
பால் விளம்பரத்தில் நடிப்பது குறித்து நதியா கூறுகையில், இரண்டு பெண் குழந்தைகளுக்கு நான் தாய். ஒரு தாயாக, குழந்தைகளை முக்கியமாக வைத்து வெளியாகும் இந்த விளம்பரத்தில் நடிப்பதை சந்தோஷமாக கருதுகிறேன் என்றார்.
ஒரு வருடத்திற்கு ஆரோக்யா பால் விளம்பரங்களில் நடிப்பாராம் நதியா.


Click it and Unblock the Notifications











