ரமலத்தின் தேடுதல் வேட்டை!

பிரபுதேவா- ரமலத்- நயனதாரா விவகாரம் சந்தி சிரித்துப் போய் விட்டது. நயனதாராவை எங்காவது பார்த்தால் அடித்து விடுவேன் என்று ரமலத் கூற, அதைக் கேட்டு நயனதாரா, அடித்து விடுவாரா என்று பதில் சவால் விட பிரபுதேவாவின் தலைதான் மாட்டிக் கொண்டு உருளுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் பிரபுதேவா சென்னைக்குத் திரும்பி தனது இல்லத்திற்குத் திரும்பினார். இதனால் மனைவி ரமலத் மகிழ்ந்து போனார்.
இந்தச் சூழ்நிலையில் நயனதாரா மட்டும் சென்னைக்கு வராமல் இருந்து வந்தார். ஆனால் நேற்று சென்னையில் அவர் பிரசன்னமானார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கு நயனதாரா வந்தார்.
நேற்று முன்தினமே நயனதாரா சென்னை வந்து விட்டாராம். இதுகுறித்தத் தகவல் ரமலதுத்துக்குப் போனது. இதையடுத்து சிலரை அவர் அனுப்பி நயனதாரா எங்கு தங்கியிருக்கிறார் என்பதை அறிந்து வருமாறு கூறினாராம். அவர்களும் வழக்கமாக நயனதாரா தங்கக் கூடிய ஹோட்டல்களில் போய் விசாரித்துள்ளனர். ஆனால் எங்குமே நயனதாரா இல்லை.
இதை முன்கூட்டியே அறிந்துதானோ என்னவோ வழக்கமாக தங்கும் ஹோட்டலில் தங்காமல் வேறு இடத்திற்குப் போய் விட்டார் நயனதாரா என்கிறார்கள்.
இந்த பரபரப்பான தேடுதல் வேட்டைக்கு இடையே, படு ரகசியமாக நேரு ஸ்டேடியம் வந்தடைந்த நயனதாரா, உள்ளே நுழைந்தார். அவரைப் பார்த்ததும், அங்கு அமர்ந்திருந்த பிரபுதேவா, அவரது அப்பா சுந்தரம் மாஸ்டர், அண்ணன் ராஜு சுந்தரம் மற்றும் குடும்பத்தினர் அப்படியே கிளம்பிச் சென்று விட்டனராம்.
நயனதாரா உட்கார்ந்த சீட்டுக்கு அருகில் சிம்பு உட்கார்ந்திருந்தார். இருந்தாலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லையாம். ஆனால் சிம்பு மேடையில் ஏறி, லூசுப் பெண்ணே பாடலை பாடியபோது அரங்கமே அதிர்ந்து விட்டதாம். நயனதாராவும் அதை சிரித்தபடி ரசித்தாராம். பின்னர் மேடையில் ஏறி வாழ்த்துரை வழங்கி விட்டுக் கிளம்பிச் சென்றாராம் நயனதாரா.
நயனதாரா வந்துள்ளதால், எப்படியும் ரமலத் வருவார், பிரச்சினை வெடிக்கலாம் என்று ஒரு தரப்பு கருதி காத்திருந்தது. ஆனாலும் ரமலத்தின் தேடுதல் வேட்டை பலிக்காமல் போனதால் அப்படி எதுவும் நடக்காமல் நடக்கவில்லை.


Click it and Unblock the Notifications











