மக்கள் டிவியில் பார்வைகள் என்ற வித்தியாசமான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

By Staff

Paarvaigal program
மக்கள் டிவியில் பார்வைகள் என்ற வித்தியாசமான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தலைமையில் இயங்கி வரும் மக்கள் டிவி, தமிழ்த் தொலைக்காட்சிகளில் மகா வித்தியாசமான டிவியாக கலக்கி வருகிறது.

சினிமா வாடையே சுத்தமாக இல்லாமல் நிகழ்ச்சிகளைக் கொடுத்து அவற்றுக்கு மக்களின் நல்லாதரவையும் பெற்றுள்ளது மக்கள் டிவி.

ஆட்டோ சங்கர், சந்தனக்காடு ஆகிய நிஜ நிகழ்வுகளை பிரதிபலிக்கும் தொடர்கள் பெரும் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவை.

தமிழ்த் தொலைக்காட்சிகளிலேயே 2வது இடத்தைப் பெற்று ஆனந்த விகடன் குழுமத்தின் சிறந்த சானல் விருதினையும் கடந்த ஆண்டு மக்கள் டிவி பெற்றது.

வழக்கமான ரசாபாசமான நிகழ்ச்சிகளைப் போட்டு மக்களின் மூளையை முடக்காமல், சிந்தனையைத் தூண்டும் சீரிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் மக்கள் டிவியில் ஒளிபரப்பாகும் வித்தியாசமான நிகழ்ச்சிதான் பார்வைகள்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் பார்வைகள். சமூக, அரசியல் விவகாரங்களை அலசும் தினசரி நிகழ்ச்சி இது. அரசியல் நிபுணர்கள், பத்திரிக்கையாளர்கள், பல்துறை பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து வைக்கும் அருமையான நிகழ்ச்சி இது.

30 நிமிட நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X