twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட்டு சேலை.நடிகைகள் 'கேட் வாக்'

    By Staff
    |

    Nila
    சென்னையில் பிரபல நடிகைகள் பங்கேற்கும் சர்வதேச ஃபேஷன் வாரம் நடைபெற உள்ளது.

    இதில் ஸ்ரேயா, தமன்னா ஜெனிலியா, பாயல், நேஹா தூபியா போன்ற நடிகைகள் பங்கேற்கிறார்கள். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த நடிகைகளை பட்டுப் புடவையணிந்து கேட்வாக் வரவிருக்கிறார்கள்.

    இது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ் சென்னையில் இன்று கூறுகையில், சென்னையில் சர்வதேச ஃபேஷன் வாரம் தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஆதரவுடன் நடைபெற உள்ளது. கிண்டியில் உள்ள லீமெரிடியன் ஹோட்டலில் வரும் 16ம் தேதி முதல் பேஷன் ஷோக்கள் நடத்தபட உள்ளன. டிசம்பர் 20ம் தேதி வரை 5 நாட்களும் 30 காட்சிகள் நடத்தபடுகின்றன.

    இதில், சிங்கப்பூர், மொரீஷியஸ், வங்காளதேசம், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் 30 இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர். சென்னையிலிருந்து மட்டும் 6 வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டு புதிய ஆடைகளைமுகபடுத்துகிறார்கள்.

    இந்த பேஷன் ஷோவுக்கு சுற்றுலாத்துறை ஆதரவளித்திருப்பதன் முக்கிய நோக்கம், உலக அளவில் பிரபலமாக இருக்கும் காஞ்சி பட்டு, திருப்பூர் பருத்தி ஆடைகளை மேலும் பிரபலமடைய செய்வது தான். சர்வதேச பேஷன் ஷோவை காணவரும் பார்வையாளர்கள் மாமல்லபுரம், காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருபவர்கள் அதன் மூலம் சுற்றுலா மேம்படும் என்று நம்புகிறோம்..., என்றார்.

    5 நாட்கள் நடக்க உள்ள இந்த பேஷன் ஷோவில் 16 நாடுகளை சேர்ந்த ஆடை வடிவமைப் பாளர்களின் ஆடைகளை நடிகைகள் தமன்னா, ஸ்ரேயா, நிலா, பிரியங்கா சோப்ரா, சமீரா ரெட்டி, நேகா துபியா, ஜெனிலியா, பாயல் உள்ளிட்ட 20 நடிகைகளும் பல்வேறு நாட்டு மாடல் அழகிகளும் அணிந்து வருகிறார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X