twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜன. 14 முதல் பிரகாஷ் ராஜின் பயணம் பட டிரெய்லர்

    By Sudha
    |

    ஜனவரி 14ம் தேதி பிரகாஷ் ராஜின் பயணம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. பிப்ரவரியில் படம் திரைக்கு வருகிறது.

    பிரகாஷ் ராஜின் தயாரிப்பு பயணம். இதை ராதாமோகன் இயக்கியுள்ளார். விமானக் கடத்தல் குறித்த கதை இது. படத்தில் நாகார்ஜூனா ஹீரோவாக நடித்துள்ளார். கமாண்டோ வீரராக அவர் வருகிறார். கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

    இப்படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், ஜனவரி 14ம் தேதி டிரெய்லரை வெளியிடுகிறோம். பொங்கலுக்கு திரைக்கு வரும் படங்களுடன் எங்களது டிரெய்லர் வெளியிடப்படும். பிப்ரவரி 4ம் தேதி படம் திரைக்கு வருகிறது என்றார்.

    படம் சிறப்பாக வந்திருப்பதாக டிரெய்லர் குறித்து அறிந்தவர்கள் கூறுகிறார்கள். வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படத்தின் கதையை அமைத்துள்ளாராம் ராதாமோகன் என்கிறார்கள்.

    English summary
    Radhamohan directed Payanam movie's trailer will be released on Jan 14 in TN theatres. The trailer will be screened along with Pongal release movies. The movie is slated for February release. Nagarjuna has played as a commando in the movie. Prakash Raj dons the bureaucrat role. The story is based on a flight hijack.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X