போர்பிரேம்ஸ் வெப்சைட் - ரஜினி துவக்கி வைத்தார்!

By Staff

Rajini launches Four Frames website
இயக்குநர் ப்ரியதர்ஷனின் போர் பிரேம்ஸ் பிரிவியு திரையரங்கின் இணைய தளத்தை (www.fourframes.co.in) திங்கள்கிழமை துவங்கி வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் அருகே அமைந்துள்ளது போர் பிரேம்ஸ் திரையரங்கம். பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு படக்காட்சிகள், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட விஐபிகளுக்கான காட்சிகள் இங்குதான் திரையிடப்படும். பெரும்பாலும் ரஜினி இந்தத் தியேட்டரில்தான் தான் விரும்பிய படங்களைப் பார்ப்பார்.

பிரிவியு தவிர, திரைப்படங்களுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், டிடிஎஸ் மிக்ஸிங், டால்பி வசதி, நவீன கேமரா வசதிகள் என ஏராளமான பணிகளைச் செய்கிறது போர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனி.

இயக்குநர் ப்ரியதர்ஷன் மற்றும் அவர் மனைவி லிஸி ப்ரியதர்ஷன் இதன் உரிமையாளர்கள். கல்யாணம் இதன் நிர்வாகியாக உள்ளார். சமீபத்தில்தான் போர்பிரேம்ஸ் புரொடக்ஷன் எனும் பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ப்ரியதர்ஷன் பொய் சொல்லப் போறோம், காஞ்சிவரம் ஆகிய படங்களைத் தயாரித்தார்.

இந்த நிறுவனத்தின் இணையதளம் திங்கள் கிழமை மாலை துவக்கி வைக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதைத் துவக்கி வைத்தார்.

போர்பிரேம்ஸ் நிர்வாகத்தினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஜினி, ப்ரியதர்ஷன் தலைமையிலான இந்த டீம் பெரிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போர்பிரேம்ஸ் கல்யாணம் செய்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X