ஷோபாவின் 'குருராஜ சரணம்'

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் இந்த சிடி வெளியீடு நடந்தது. ரஜினி முதல் சிடியை வெளியிட நடிகர் ராகவ லாரன்ஸ் பெற்றுக் கொண்டார். ரஜினியும், லாரன்ஸும் தீவிர ராகவேந்திரா பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிடியில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்துமே ராகவேந்திராவைப் பற்றிய பாடல்கள்.
நிகழ்ச்சியில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், டாக்டர் கணேஷ், விஜய்யின் பாட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறந்த கர்நாடக இசைப் பாடகியான ஷோபா சந்திரசேகர், சமீப காலமாக பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த குருராஜ சரணம் வெளியாகியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications