சந்திரபாபு நாயுடுவுக்காக ரோஜா யாகம்!

இந்தத் தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் போட்டியிட்டுள்ளார் ரோஜா. ஆந்திரா முழுவதும் இரு வாரங்களுக்கு முன்பே தேர்தல்கள் முடிந்துவிட்டன.
இந்தத் தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றுவிடுவார் என்று ஆந்திர பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இந்நிலையில் ஹைதராபாதில் இந்த யாகத்தை நடத்தியுள்ளார் ரோஜா.
இதுகுறித்து ரோஜா கூறுகையில், 'தெலுங்கு தேசம்தான் இந்தத் தேர்தலில் வெற்றி வாகை சூடும். இதனை உறுதிப்படுத்தவும், எங்கள் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகவும் இந்த யாகத்தை நடத்தினேன். நிச்சயம் அவர் முதல்வராவார். என் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி', என்றார்.
இந்த யாகத்தில் தெலுங்கு தேசம் இளைஞர் அணி தலைவர் கோடாலி ரவிக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
சந்திரபாபு நாயுடு சினிமா தமிழ் தெலுங்கு யாகம் ரோஜா chandrababu naidu chandragiri chief minister cinema telugu yagna


Click it and Unblock the Notifications