சோனியா - செல்வராகவன் விவாகரத்து செய்ய முடிவு

By Staff

Sonia Agarwal with Selvaraghavan
பெரும் பரபரப்பாக பேசப்பட்டு, பெரும் ஆடம்பரமாக நடந்த செல்வராகவன், சோனியா அகர்வால் திருமணம் குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு வந்து விட்டது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். தந்தை வழியில் இவரும் இயக்குநரானார். இவரது தம்பி தனுஷ் தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரம்.

செல்வராகவன் இயக்கிய முதல் படமான காதல் கொண்டேன் படத்தின் நாயகியாக நடித்தவர் சோனியா அகர்வால். அந்தப் படத்தில் ஏற்பட்ட பழக்கம் அப்படியே காதலாக மாறியது.

இருவரும் காதலிப்பதை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனாலும் காதலித்து வந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திலிருந்து திரையுலகமே திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தியது.

இந்த நிலையில் இருவரும் தற்போது தங்களது திருமணத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பின்போது நடிகை ஆன்ட்ரியாவுடன், செல்வராகவனுக்கு பழக்கம் ஏற்பட்டதாக செய்திகள் பரவின. இதுதொடர்பாக செல்வராகவனுக்கும், சோனியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

செல்வராகவன், சோனியா அகர்வால் விவாகரத்து செய்தியால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுதான் செல்வராகவனின் நண்பரான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விவாகரத்து செய்தார் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X