தீபாவளிக்கு கொக்கரிக்கும் சேவல்!

பிரபல விநியோகஸ்தர் ஜின்னா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடித்துவிட்டது.
காதல், வீரம், இசை என ஒரு பக்கா குடும்ப பொழுதுபோக்குச் சித்திரமாக உருவாகியுள்ள சேவலில் பரத்துக்கு பூனம் பஜ்வா, சிம்ரன் என இரண்டு ஜோடிகள்.
ஹரிக்குப் பிடித்தமான நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் முழுக்க முழுக்க திருநெல்வேலி தமிழ் பேசி நடித்துள்ளாராம் பரத்.
திட்டமிட்டு படத்தை இயக்கினால் குறித்த காலத்துக்கு முன்பே பிரிண்டுகளுடன் போட்டிக்குத் தயாராக நிற்கலாம் என்பது ஹரியின் கொள்கை. அதன்படி படத்தின் வேலைகள் முழுதையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ஹரி. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.
தீபாவளிப் பந்தயத்தில் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு, தயாரிப்பாளர் - விநியோகஸ்தருக்கு லாபம் தரப்போகும் படம் என்ற நல்ல இமேஜ் இப்போதே ஏற்பட்டுவிட்டது ஹரியின் சேவல் மீது.
நல்லா கூவுங்க!


Click it and Unblock the Notifications











