ஹேமாவுக்காக ஷெர்லின் ஆல்பம்!

மாடல் அழகியாக இருந்து நடிகையாக, பாடகியாக கலக்கி வருபவர் ஷெர்லின் சோப்ரா. இவரது கிளாமர் நடிப்பில் உருவான முதலாவது இசை ஆல்பம் ஷெர்லினுக்கு சந்தோஷத்தைத் தரவில்லை. ஆனால் இப்போது உருவாக்கியிருக்கும் 2வது ஆல்பமான டர்ட் இ ஷெர்லின் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்கிறார் ஷெர்லின்.
இந்த ஆல்பத்தை முன்னாள் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கு சமர்ப்பிப்பதாக கூறுகிறார் ஷெர்லின்.
இந்த ஆல்பத்தில், ஹேமமாலினியின் சூப்பர் ஹிட் படமான தஸ் நம்ப்ரியிலிருந்து சில பாடல் வரிகளை எடுத்து பயன்படுத்தியுள்ளேன். ஹேமாவுக்காக இதை நான் செய்துள்ளேன். இதற்காக பெருமை அடைகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் ஷெர்லின்.
மிக மிக கவர்ச்சிகரமாக நடிப்பதையே அதிகம் விரும்புகிறீர்களே, ஏன் என்று கேட்டால், கவர்ச்சி என்பது எதை வைத்து என்பது முக்கியமல்ல. நீச்சல் உடையில் வந்தால் கூட அதில் நல்ல நடிப்பைக் கொடுக்க முடியும்.
எல்லாம் பார்ப்பவர்களின் பார்வையில்தான் உள்ளது. குறைந்த உடையில்தான் கவர்ச்சி காட்ட முடியும் என்று இல்லை. கவர்ச்சியைக் காட்ட பல வழிகள் உள்ளன.
பாலிவுட்டில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். பத்து படங்களில் நடித்தால் அதில் ஒரு படத்திலாவது எனக்கு விருது கிடைக்கும் வகையில் நடிக்க வேண்டும் என்கிறார் ஷெர்லின்.


Click it and Unblock the Notifications











