ஒரு வழியாக 'பாஸ் செய்த' சித்து ப்ளஸ் டூ!

By Chakra

Chandini Tamilarasan
எந்த நேரத்தில் சித்து ப்ளஸ் டூ - பர்ஸ்ட் அட்டம்ட் என்று பாக்யராஜும் அவர் மகனும் பெயர் வைத்தார்களோ... படம் 'பாஸ்' பண்ணுவதில் ஆரம்பமே தகராறாக இருந்தது.

கிட்டத்தட்ட 6 மாத பஞ்சாயத்துக்குப் பிறகு இப்போதுதான் பிரச்சினைகள் தீர்த்து, திரைக்கு வர சுறுசுறுப்பாகத் தயாராகிறது சித்து ப்ளஸ் டூ.

பாரிஜாதம் படத்துக்குப் பிறகு பாக்யராஜ் எழுதி, தயாரித்து, இயக்கிய படம் சித்து ப்ளஸ்டூ. அவர் மகன் சாந்தனுதான் ஹீரோ. படம் சிறப்பாக வந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு கிளம்ப, உடனடியாக படத்தை கணிசமான விலைக்கு வாங்கிக் கொண்டது மோசர் பேர் நிறுவனம். இந்த ஆண்டு பொங்கலுக்கே வந்திருக்க வேண்டியது.

ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு, தயாரிப்புச் செலவை அதிகமாகக் காட்டிவிட்டார்கள் என புலம்ப ஆரம்பித்த மோசர் பேர், ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்தப் படம் வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் வரை போயிருக்கிறார்கள்.

ஒரு வழியாக இருதரப்பையும் உட்கார வைத்துப் பேசியதில், படத்தை வெளியிட ஒப்புக் கொண்டது மோசர் பேர்.

வரும் செப்டம்பர் 3-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X