வான்டட் பட ரிலீஸ்: ரூ.3 கோடி டெபாசிட் செய்ய ஸ்ரீதேவிக்கு உத்தரவு!

By Staff

Ayesha Takia
பிரபுதேவா இயக்கி, சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'வான்டட்' (போக்கிரி படத்தின் இந்தி ரீமேக்) படத்தை ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பாளர் ஸ்ரீதேவி ரூ.3 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவரது கணவர் போனி கபூருக்கும், போனி கபூரின் தந்தை சுரேந்தரா கபூருக்கும் 'ஸ்ரீதேவி புரொடக்ஷன்ஸ்', 'நரசிம்ம எண்டர்பிரைசஸ்', 'எஸ்.கே.பிலிம்ஸ் எண்டர்பிரைசஸ்' ஆகிய பட நிறுவனங்கள் மும்பையில் உள்ளன. இதில் எஸ்கே பிலிம்ஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் 'வான்டட்' என்ற இந்தி படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகர்கள் சல்மான்கான், வினோத்கன்னா, நடிகை ஆயிஷா தாஹியா ஆகியோர் நடித்துள்ளனர். பிரபுதேவா இயக்கியுள்ளார். விரைவில் படம் வெளியாக உள்ள சூழலில் மும்பையைச் சேர்ந்த சுஷில் குப்தா சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

ஸ்ரீதேவி குடும்பத்துக்கு 3 பட நிறுவனங்கள் உள்ளன. இந்த சினிமா நிறுவனங்களுக்கு நான் நிதி உதவி வழங்கினேன். இதுமட்டுமல்லாமல், பிலிம் ரோல் சப்ளையும் செய்தேன். ஆனால், இதற்காக ரூ.7 கோடியே 93 லட்சம் எனக்கு வரவேண்டியதுள்ளது. இந்த பணத்தை எனக்கு வழங்காமல் ஸ்ரீதேவி குடும்பத்தினர் தயாரித்த 'வான்டட்' படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது, என்று கூறியிருந்தார்.

ரூ 3 கோடி உத்தரவாதம்

இந்த வழக்கை நீதிபதி ராஜசூரியா விசாரித்தார். நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் ரூ.3 கோடியே 60 லட்சத்துக்கு வங்கி உத்தரவாதம் அல்லது பணத்தை டெபாசிட் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதுதவிர, ரூ.5 கோடியே 40 லட்சத்துக்கு சொத்து செக்யூரிட்டி வழங்க வேண்டும் என்றும், இவ்வாறு வழங்கியபிறகு 'வான்டட்' படத்தை திரையிடலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவரது கணவர், மாமனார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த அப்பீல் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

வாங்கிய கடனுக்காக அவ்வப்போது நாங்கள் பணத்தைkd கொடுத்து வந்தோம். முழு பரிவர்த்தனையும் மும்பையில்தான் நடந்தது. எனவே சென்னையில் வழக்கு தொடர முடியாது. இக்கோர்ட்டு இந்த வழக்கை விசாரிக்க இயலாது. இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தவறானதாகும். வழக்கில் நிவாரணம் தந்ததற்கான காரணத்தை நீதிபதி உத்தரவில் கூறப்படவில்லை. மேலும், போலியான காசோலைகள், கடிதம் போன்றவற்றை உருவாக்கியுள்ளனர். ஆகவே, நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், ஆர்.சுப்பையா ஆகியோர் விசாரித்தனர். வாதத்தின்போது ஸ்ரீதேவியின் வழக்கறிஞர், வரும் 16ம் தேதிக்குள் ரூ.3 கோடியை கோர்ட்டில் டெபாசிட் செய்கிறோம் என்று உத்தரவாதம் வழங்கினார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு 16ம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X