தமிழ் பேசும் 'தாரே ஜமீன் பர்'!

தெலுங்குப் பதிப்புக்கு நெலமீத தாரலு என பெயரிட்டுள்ளனர். இந்தத் தகவலை சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமீர்கான் வெளியிட்டார்.
கொல்லப்புடி சீனிவாஸ் நினைவு சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருது அமீர்கானுக்கு வழங்கப்பட்டது. இதற்காக சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வழக்கமாக எந்த விருதையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இந்த விருது சிறப்பானது. சில விருதுகள் கொடுக்கப்படும் நபர்களால் பெருமை பெறுகின்றன. அந்த வகையில் கொல்லப்புடி சீனிவாஸ் விருதும் சிறப்பு வாய்ந்தது.
இந்த விருதினை நான் வரவேற்கிறேன், இந்த விருதை நிறுவியவர்களையும் பாராட்டுகிறேன்.
தாரே ஜமீன் பர் படத்தின் கதையை நான் மிகவும் ரசித்தேன். அதன் திரைக்கதையும் என்னை வெகுவாக கவர்ந்தது. இதை நமது மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் காட்ட விரும்பினேன்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் எனது கேரக்டருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இரு மொழிகளிலும் செப்டம்பர் 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
தாரே ஜமீன் பர் படம் எனது குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை எனக்குக் கொடுத்தது. அதேபோல, டிஸ்லெக்ஸியா குறைபாடுள்ள குழந்தைகளை கொண்டுள்ள பல பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றார் அமீர்.


Click it and Unblock the Notifications











