மலையாளத்திலிருந்து தமிழுக்கு டப் ஆகி வரும் உருமி
கேரளாவில் சக்கை போடு போட்ட உருமி தமி்ழில் வெளியாகவிருக்கின்றது.
பிரித்விராஜ், பிரபுதேவா, ஜெனிலியா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பில் வெளியான மலையாளப் படம் உருமி. இதை சந்தோஷ் சிவன் இயக்கி இருந்தார். பிரித்விராஜ், ஷாஜி நடேசன் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோர் தயாரித்திருந்தனர். 15 நூற்றாண்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம்.
வாஸ் கோட காமா எப்படி இந்தியாவுக்கு வந்தார், இந்தியர்களை எவ்வாறு இரக்கமின்றி சுரண்ட முயன்றார் என்பது தான் கதை. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இப்படம் விரைவில் தமிழில் வெளியாக உள்ளது.
கடந்த 8-ம் தேதி ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் தமிழ் உருமியின் சிறப்பு காட்சி காண்பிக்கப்பட்டது. அதை இயக்குனர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் ராம்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டு ரசித்தனர்.
Comments


Click it and Unblock the Notifications