சிலிர்க்க .. 'ஷ்ரியா' விவேக்!

படத்துக்குப் படம் வடிவேலு வெடிவேலுவாக கலக்கிக் கொண்டிருப்பதால் இன்னும் கூட நம்பர் ஒன் காமெடியன் இடத்தில் விவேக்கால் நிலையாக அமர முடியாத நிலை. இதனால் படத்துக்குப் படம் கலக்கல் கெட்டப்களிலும், வெரைட்டியையும் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார் விவேக்.
இருந்தாலும் சமீப காலத்தில் விவேக் நடித்து வெளியான படங்களில் அவரது காமெடி பெரிய அளவில் பேசப்படவில்லை. ஹாஸ்யத்தை வரவவழைக்கவில்லை. காரணம் ஒரே மாதிரியான காமெடி ஸ்டைல்தான் காரணம்.
சிவாஜி படத்தில் அவரது காமெடி பேசப்பட்டது. ஆனால் அப்படத்துக்குப் பின்னர் வெளியான படங்களில் ரஜினி ஸ்டைலையும், சிவாஜி ஸ்டைலையும் மாற்றி மாற்றி உல்டா செய்ததால் காமெடி சப்பென்றிருந்தது.
இந்த நிலையில் குரு என் ஆளு படத்தில் இதுவரை போட்டிராத சூப்பர் டூப்பர் கெட்டப்பைப் போட்டு பின்னியிருக்கிறார்.
அதாவது நடிகை ஷ்ரியா கெட்டப்பில் இப்படத்தில் பெண் வேடம் பூண்டிருக்கிறாராம் விவேக். இதற்கு முன்பும் கூட அவர் பெண் வேடமிட்டுக் கலக்கியவர்தான். ஆனால் இந்த கெட்டப் கவர்ச்சிகரமானதாக மாறியிருக்கிறதாம்.
சிவாஜி படத்தில் வந்த ஷ்ரியாவை மாடலாக வைத்து அதே மாதிரியான கெட்டப்பைப் போட்டிருக்கிறார் விவேக். இந்த கேரக்டர் மூலம் ஒரு பாடல் பாடி அதன் மூலம் சமூக விழிப்புணர்வையும் தெளித்திருக்கிறாராம் விவேக்.
காட்சிப்படி ஷ்ரியா வேடத்தில் விவேக்கும், ரஜினி வேடத்தில் எம்.எஸ். பாஸ்கரும் ஜோடி போட்டு பாடுகிறார்கள். அந்தப் பாட்டு - சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படத்தில் வரும் ஒரு கூடை சன் லைட்.
இதுபோதாதென்று சரோஜா தேவி ஸ்டைலில் சேலை கட்டிக் கொகண்டு, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே பாடலுக்கும் ஆட்டம் போட்டுள்ளார் 'ஷ்ரியா' விவேக்.
'ஷ்ரியா' விவேக்கின் ஸ்டில்களைப் பார்த்தாலே ஜிலுஜிலுப்பாக இருக்கிறதே, படத்தில் எப்படி இருக்குமோ தெரியலையே ..!


Click it and Unblock the Notifications











