யோகி... அழகிரி தலைமையில் இன்று பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழா!

சுப்பிரமணிய சிவா இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பருத்திவீரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, அமீரே புதுப் படம் எதையும் இயக்காமல் ஒரு தவம் போல காத்திருந்து செய்துள்ள படம் இது.
அமீருக்கு ஜோடியாக இதில் நடித்திருப்பவர் மதுமிதா.
'இந்தப் படம் ஒரு ஆக்ஷன் கதைதான். ஆனால், இதுவரா பார்க்காத வேறு தளம்... வேறுபட்ட நடிப்பை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்' என்கிறார் இயக்குநர் சுப்பிரமணிய சிவா.
ஆடியோ வெளியீட்டை மிகப் பிரமாண்ட நடத்துகிறார்கள். இன்று சத்யம் திரையரங்கில் நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் முக அழகிரி பங்கேற்கிறார். பாரதிராஜா, ராமநாராயணன், கேஆர்ஜி, ஆர்பி சவுத்ரி, பாலு மகேந்திரா, பாலா, சேரன், சீமான், சன் பிக்சர்ஸ் சக்ஸேனா என பெரு் விஐபிக்கள் பட்டாளமே விழாவைச் சிறப்பிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications











