ஆபாசப் படம்: பத்மா-தொழிலதிபர் திடீர் சமரசம்!

இதில் இப்போது இப்போது ஒரு திடீர் திருப்பம்.
நடிகை பத்மா ரூ.10 கோடி கேட்டு மிரட்டியதாக நான் புகார் கூறவில்லை. போலீசாரே அப்படி எழுதிக் கொண்டனர் என்று புகார் கொடுத்த தொழிலதிபரே நேற்று கோர்ட்டில் கூறிவிட்டார்.
சென்னை அண்ணா நகரில் வசிப்பவர் தொழிலதிபர் பிரதீப் கொனாரே. இவர் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி, தென் சென்னை துணை கமிஷனர் துரைராஜிடம் அளித்த புகாரில், வீராசாமி பட நாயகியும் மாடல் அழகியுமான பத்மாவுடன், மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றேன்.
அங்கு இருவரும் தனியாக செக்ஸில் ஈடுபட்டிருந்தபோது செல்போனில் என்னை ஆபாச படம் எடுத்தார். அதைக் காட்டி ரூ.10 கோடி கேட்டு நடிகை பத்மா என்னை மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பத்மாவை பரங்கிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், பத்மாவையும் அவரது நண்பர்கள் சஞ்சய், அமீர்ஜான், சந்திரன் ஆகியோரையும் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் பத்மா உட்பட 4 பேரும் ஜாமீனில் வெளி வந்தனர். சில வாரங்கள் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி (ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்தவாரே) கையெழுத்து போட்டு வந்தார். இந்த வழக்கு நீதிபதி ராமநாதன் முன்னிலையில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதீப் கொனாரே, பத்மா, சஞ்சய், அமீர்ஜான், சந்திரன் ஆகியோர் ஆஜராயினர். பின்னர் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தார் நீதிபதி ராமநாதன்.
அதற்குள், பிரதீப் கொனாரேவும் பத்மாவும் தங்கள் வக்கீல்கள் மூலம் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் தங்களுக்குள் சமரசம் செய்து கொள்வதாகக் கூறியிருந்தனர்.
இதற்கு அரசு வக்கீல் வேலுச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பணம் கேட்டு மிரட்டல், ஆயுதம் வைத்திருத்தல், கூட்டாக கொள்ளை அடித்தல், கூட்டுச் சதி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சமரசம் செய்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றார்.
இதையடுத்து அந்த சமரச மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
பின்னர் இந்த வழக்கில் பிரதீப் கொனாரேயிடம் அரசு வக்கீல் விசாரணை நடத்தினார். பத்மாவுக்கும் எனக்கும் ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டது. அவரை மிரட்டுவதற்காக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன். ஆனால், போலீசார் வேறு மாதிரியாக எழுதிக் கொண்டனர். பணம் கேட்டு அவரோ அவரது ஆட்களோ துப்பாக்கியைக் காட்டி என்னை மிரட்டவில்லை என்றார் பிரதீப்.
ஆசை நாயகியாக்க பார்த்தார்-பத்மா:
நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த பத்மா, நிருபர்களிடம் கூறுகையில், எனக்கும் பிரதீப் கொனாரேவுக்கும் 3 ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. பல முறைமுறை நாங்கள் தனிமையில் உல்லாசம் அனுபவித்துள்ளோம். ஒருகட்டத்தில் அவர் தன்னுடன் தொடர்ந்து இருக்கும்படி என்னை வற்புறுத்தினார்.
சினிமா பீல்டில் நான் முன்னணியில் உள்ளதால் அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. எனக்கு என்ன அழகு குறைந்தா விட்டது? எனக்கு வேறு வாழ்க்கை கிடைக்காதா? என்று கூறித் திட்டி விட்டேன்.
அவரது ஆசை நாயகியாக இருக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்து போலீசில் பொய் புகார் கூறிவிட்டார். இப்போது சமாதானமாக செல்லலாம் என்கிறார். என் பெற்றோர் கூறியதால் இந்த சமாதானத்துக்கு ஒப்புக் கொண்டேன் என்றார்.
தமிழ் சினிமாவ விட ஏகப்பட்ட லாஜிக் மிஸ் ஆகுதே...


Click it and Unblock the Notifications











