அமோக வசூலில் 'சிங் இஸ் கிங்'

By Staff

Akshay Kumar with Katrina Kaif
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அக்சய் குமார், கேத்ரீனா கைப் நடித்துள்ள சிங் இஸ் கிங் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறதாம்.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள படம் சிங் இஸ் கிங். இதன் பாடல்கள் ஏற்கனவே வெகு பிரபலமாகி விட்டன.

மன்மோகன் சிங் அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றபோது கூட சில ஆங்கில டிவிகளில் சிங் இஸ் கிங் பாடலைத்தான் போட்டுக் கலக்கினார்கள்.

இந்தியாவிலும், வட அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகளிலும் திரையிட்ட 2 நாட்களிலேயே ரூ. 18 கோடியைவசூலித்துள்ளதாம் சிங் இஸ் கிங்.

ஆகஸ்ட் 8ம் தேதி படம்திரைக்கு வந்தது. அன்றைய தினம் ரூ. 8 கோடி வசூலித்தது. 2வது நாள் ரூ. 10 கோடியை அள்ளியது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பாலிவுட் வசூலாம்.

ஓம் சாந்தி ஓம், ஜோதா அக்பர் ஆகிய படங்களை விட சிங் இஸ் கிங் படத்துக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம். வசூலிலும் இந்தப் படங்களை சிங் இஸ் கிங் ஓரம் கட்டும் என்கிறார்கள்.

ஏற்கனவே தொடக்க நாள் வசூல் சாதனையில் இந்த இரு படங்களையும் சிங் இஸ் கிங் முறியடித்துள்ளது. ஓம் சாந்தி ஓம் படத்துக்கு தொடக்க நாளில் 2 லட்சத்து 27 ஆயிரம் டாலர் கிடைத்தது. ஜோதா அக்பருக்கு 2 லட்சத்து 9 ஆயிரம் டாலர் கிடைத்தது. சிங்குக்கோ 2 லட்சத்து 32 ஆயிரம் டாலர் கிடைத்துள்ளது.

ஹேப்பி சிங் என்ற கதாபாத்திரத்தில் அக்சய் குமார் நடித்துள்ளார். காமெடி கலந்த ஆக்ஷன் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X