மார்ச்சில் கண்ணபிரானுக்கு பூஜை

மெளனம் பேசியதே மூலம் தனது பிரமாண்ட வருகைக்கு பிள்ளையார் சுழி போட்ட அமீர், ராம் மூலம் விஸ்வரூபம் எடுத்தார். பருத்தி வீரன் மூலம் பிரமாண்டத்தின் உச்சத்திற்கே கூட்டிச் சென்றார்.
இந்த நிலையில் தனது அடுத்த படைப்பை கையில் எடுத்துள்ளார் அமீர்.
கண்ணபிரான்தான் அமீரின் அடுத்த படைப்பு. மெகா பட்ஜெட் படமாக இது உருவாகிறது. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார்.
கதாநாயகி இன்னும் தேர்வாகவில்லை. தேர்வான பின்னர் அமீர் அறிவிப்பார்.
கண்ணபிரான் குறித்து அமீர் கூறுகையில், திரைக்கதை தயாரானவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படும். இறுதிக் கட்டத்தில் திரைக்கதை பணிகள் உள்ளன. பக்காவாக திட்டமிட்ட பின்னர் களத்தில் இறங்குவதே எனது ஸ்டைல். அவசரம் காட்ட மாட்டேன் என்றார்.
தனது படத்திற்கு இசையமைக்க வேண்டும் என இசைஞானி இளையராஜாவிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் அமீர். இதற்கு முன்பு யுவன் ஷங்கர் ராஜாதான் அமீர் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் படத்தின் பிரமாண்டம், கதையின் கணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சீனியர் ராஜாவை அணுகியுள்ளாராம் அமீர்.
இந்தப் படத்தை இயக்குவதற்கு அமீருக்கு தரப்படவுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா, ஜஸ்ட் ரூ. 4 கோடியாம். ஷங்கருக்குப் பிறகு ஒரு இயக்குநருக்கு தரப்படும் அதிகபட்ச சம்பளம் இதுதானாம்.
மார்ச் முதல் வாரத்தில் கண்ணபிரானுக்கு எப்படியும் பூஜை போட்டு விடுவார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











