பச்சன்களின் 'மறக்க முடியாத டூர்'

By Staff

Aishwarya rai, Abishek and Amitab Bachan
அமிதாப் பச்சன் மற்றும் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் உள்ளிட்ட பாலிவுட் படக் குழுவினர் பங்கேற்கும் மறக்க முடியாத டூர் எனப் பெயரிடப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது.

டோரன்டோவிலிருந்து இந்த சுற்றுப்பயணம் ஆரம்பிக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் பச்சன் குடும்பத்தினர் முக்கிய நட்சத்திரங்களாக கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் பிரீத்தி ஜிந்தா, ரித்தீஷ் தேஷ்முக், அக்ஷய் குமார், மாதுரி தீக்ஷித் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர். அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா இணைந்து பங்கேற்கும் முதலாவது கலைப் பயணம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான ரிகர்சல் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷியாமக் தவார் நடன வடிவமைப்பை கவனிக்கிறார்.

இந்த சுற்றுப்பயணம் குறித்து ஐஸ்வர்யா ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாதுரி தீக்ஷிக் மிகச் சிறந்த நடிகை,டான்சர். அவருடன் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கவிருப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.

இந்தியத் திரையுலகினருக்கு உலகெங்கும் வாழும் இந்திய திரைப்பட ரசிகர்கள் அளித்து வரும் பேராதரவுக்கு நன்றிக் கடனாக இந்த நிகழ்ச்சியைக் கருதுகிறோம் என்றார்.

வெறும் நடனம், ஆட்டம், பாட்டம் என்றில்லாமல் உலக வெப்பமயமாக்கல் குறித்த விழிப்புணர்வையும் இந்த கலை நிகழ்ச்சிகள் மூலம் பரப்பவுள்ளனராம்.

டோரண்டோவில் தொடங்கும் இந்த மறக்க முடியாத டூர் நிகழ்ச்சி, ஜூலை 20ம் தேதி டிரினிடாடிலும், 26ம் தேதி லாஸ் ஏஞ்செலஸிலும், 27ம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலும், ஆகஸ்ட் 2ம் தேதி ஹூஸ்டனிலும், 9ம் தேதி அட்லாண்டாவிலும், 10ம்தேதி சிகாகோவிலும், 15ம் தேதி நியூயார்க்கிலும், 17ம்தேதி வான்கூவரிலும், 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் லண்டனிலும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

ஆகஸ்ட் 29ம் தேதி ஹாலந்தில் தங்களது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

அடுத்து ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 2வது கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது இந்த பச்சன் குழு. விஸ்கிராப்ட் நிகழ்ச்சி வடிவமைப்பை கவனித்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3வது கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இக்குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X