இன்னும் முடியாத 'கடவுள்'!

இயக்குநர் பாலா இழைத்து இழைத்து உருவாக்கியுள்ள படம் நான் கடவுள். ஆர்யா, பூஜா இணைந்து நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக் களத்துடன் கூடிய இப்படம் மிகப் பிரமாதமாக வந்திருப்பதாக பாலா தனது நெருங்கிய வட்டாரத்திடம் கூறி வருகிறார்.
படத்திற்கு இசைஞானி இளையராஜா அற்புதமான பாடல்களைப் போட்டுக் கொடுத்துள்ளாராம். குறிப்பாக ரீ ரெக்கார்டிங் மிரட்டும் என்று கூறுகிறார்கள்.
பாலாவுக்கு படத்தை விட அதில் நடித்த ஆர்யா, பூஜா மீது பரம சந்தோஷமாம். இருவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். இப்படத்துக்குப் பின்னர் எங்கேயோ போகப் போகிறார்கள் என்றும் கூறி வருகிறார்.
படம் முடிந்து விட்ட நிலையில் சில காட்சிகளில் பாலாவுக்கு திருப்தி போதவில்லையாம். இதனால் அந்தக் காட்சிகளை மட்டும் ரீ ஷூட் செய்துள்ளாராம்.
படம் தொடர்பான நகாசு வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறதாம். பொங்கலுக்கு கடவுளைக் கண்ணில் காட்ட திட்டமிட்டுள்ளாராம் பாலா.


Click it and Unblock the Notifications











