Don't Miss!
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ப்ரூனியின் 'போதை' ஆல்பம்!
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகியான கார்லா ப்ரூனி. இப்போது இவர் பிரான்ஸ் அதிபர் சர்கோஸியின் மனைவி. இருவரும் காதலித்து சமீபத்தில் கரம் பிடித்தனர்.
சர்கோஸி - ப்ரூனி காதல் செய்திகளை வெளியிடாத உலக பத்திரிகைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு படு விறுவிறுப்பானது இவர்களின் காதல் கதை. கல்யாணமான பின்னரும் கூட தொடர்ந்து செய்திகளில் முதன்மையான இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார் ப்ரூனி.
அவரது முழு நீள நிர்வாணப் படம் ஒன்றை ஒரு பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ப்ரூனி ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். அஸ் இஃப் நத்திங் ஹேப்பன்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் ப்ரூனியின் 30 காதலர்கள் குறித்து 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் சர்கோஸியை ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துக்களுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளார் ப்ரூனி.
ஒரு பாடலில், தனது முன்னாள் காதலர்களான மைக் ஜேக்கர், எரிக் கிளாப்டன் குறித்து புகழ்ந்து பாடியுள்ளார் ப்ரூனி. அதில் வரும் ஒரு வரி ... நாற்பது வயதானாலும் நான் ஒரு குழந்தைதான். 30 காதலர்கள் இருந்தாலும் நான் இன்னும் குழந்தைதான் ... என்று போகிறது.
மா கேம் என்று பெயரிடப்பட்ட பாடலில், தனது காதல் கணவரான சர்கோஸியை, போதைப் பொருட்களுடன் ஒப்பிட்டுப் புகழ்ந்துள்ளார் ப்ரூனி.
.... நீ எனது போதை. ஆப்கனின் ஹெராயினை விடவும், கொலம்பியன் ஒயிட்டை விடவும், நீ அபாயகரமான போதையைக் கொண்டவன். உன்னை நான் உருட்டுகிறேன், புகைக்கிறேன் ... என்று போகிறது அந்தப் போதைப் பாட்டு.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தப் பாட்டை 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ளார் ப்ரூனி. அப்போது அவருக்கும், சர்கோஸிக்கும் இடையே பழக்கமோ, நெருக்கமோ ஏற்பட்டிருக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
ஜூன் 21ம் தேதி இந்த ஆல்பம் விற்பனைக்கு வருகிறது. இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை, ரஃபேல் என்தோவன் என்பவர் எழுதியுள்ளார். இவர் வேறு யாருமல்ல, ப்ரூனியின் முன்னாள் கணவர்.
இப்பவே கண்ணைக் கட்டிக்கிட்டு வருதா?