'பில்லா'வை ஓரம் கட்டிய சந்திரமுகி!

குறிப்பாக சன் டிவியில் சந்திரமுகி படம் ஒளிபரப்பாகத் தொடங்கியபோது பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்த ரசிகர்கள், படம் ஆரம்பித்ததும் பட்டாசு வெடிப்பதையே நிறுத்திவிட்டு படத்தில் மூழ்கி விட்டதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன.
அந்த வகையில் சந்திரமுகியை ஒளிபரப்பிய சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் யாரும் தொட முடியாத உயரத்துக்கு எகிறிவிட்டதாக இப்போது புள்ளி விரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை வெளியான டிஆர்பி ரேட்டிங்படி சந்திரமுகியை ஒளிபரப்பிய சன் டிவியின் டிஆர்பி 20.82 ஆக இருந்துள்ளது!
இதே நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சி பில்லா படத்தை ஒளிபரப்பியது. எண்பதுகளில் ரஜினி நடித்த இந்தப் படத்தைத்தான் அஜீத்தை வைத்து ரீமேக் செய்திருந்தார்கள். ஆனால் இதற்குக் கிடைத்த டிஆர்பி ரேட்டிங் 4.28 சதவிகிதமே!
இந்த புத்தம் புதிய பில்லாவுக்கு ரசிகர்களிடம் இந்த அளவு மோசமான வரவேற்பு கிடைக்கும் என யாரும் நம்பவே இல்லை என்கின்றனர்.
ரஜினியின் சந்திரமுகிக்கு அடுத்து அதிக வரவேற்பைப் பெற்ற படம் வேட்டையாடு விளையாடு. இதற்கு கிடைத்த ரேட்டிங் 11.29. அன்று அதே நேரத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மருதமலைக்கு கிடைத்த புள்ளிகள் 7.74.
ஆக திரையரங்குகளில் எப்படி ஒரு ரஜினி படத்துடன் மற்ற படங்கள் போட்டியிட முடியாதோ, அதே நிலைதான் தொலைக்காட்சியிலும் நிலவுகிறது. இதனால்தான் இந்த தீபாவளிக்கு பெரிய படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்து விட்டார்களோ!


Click it and Unblock the Notifications











