வாழ்த்து மழையில் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஆஸ்கார் விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள பெருமைக்குரிய விருது கோல்டன் குளோப் விருதாகும். ஆஸ்கார் மேடைக்குச் செல்லும் நுழை வாயிலாக பார்க்கப்படுகிறது கோல்டன் குளோப்.
இத்தனை சிறப்பு மிக்க இந்த விருதைப் பெற்ற ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவர்களுக்கு உலகப் புகழ் பெற்ற கோல்டன் குளோப் விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் அடைந்துள்ளார். தமிழ், இந்தி போன்ற மொழிப் படங்களுக்கு மிகச் சிறப்பாக இசை அமைத்து பல்வேறு விருதுகளைப் பெற்ற ரஹ்மான் தற்போது உலக அளவில் விருது பெற்றுள்ளார். அவர் இசைத்துறையில் மேலும் பல வெற்றிகளைக் குவித்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் இருவரும் ரஹ்மானுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் எந்திரன் படத்துக்கும் இசை ரஹ்மான்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!


Click it and Unblock the Notifications











