விஜயகாந்த்தின் எங்கள் ஆசான் படத்துக்குத் தடை விதிக்க கோர்ட் மறுப்பு

By Staff

Vijaykanth with Seril Brindo
நடிகர் விஜயகாந்த் நடித்துள்ள எங்கள் ஆசான் படத்துக்கு தடைவிதிக்க சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நேற்று மறுத்துவிட்டது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் தர வேண்டிய கடன் பாக்கியைத் தரும்வரை பட வெளியீட்டைத் தடை செய்ய வேண்டும் என காளிகாம்பாள் மூவிலேண்ட் உரிமையாளர் சுப்புராஜ் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

தனது மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

யுவஸ்ரீ கிரியேஷன்ஸின் தங்கராஜ் தமிழில் 'மீசை மாதவன்' படத்தை தயாரித்தார். இந்த படத்தை தயாரிக்க என்னிடம் ரூ.11/2 லட்சத்தை 24 சதவீத வட்டிக்கு வாங்கினார். இந்த கடனை அவர் இன்னும் திருப்பி தரவில்லை.

இப்போது நடிகர் விஜயகாந்த், நடிகை செரில் பிரிண்டோ நடித்த எங்கள் ஆசான் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படம் 13-ந் தேதி (இன்று) வெளிவர உள்ளது. வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் எனக்கு தரவேண்டியுள்ளது. இந்த பணத்தை தராமல் எங்கள் ஆசான் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது, என்று கோரியிருந்தார்.

தடை விதிக்க மறுப்பு

ஏற்கனவே சிட்டி சிவில் கோர்ட்டில் கேவியட் மனுதாக்கல் செய்திருந்தார் தங்கராஜ். தனது தரப்பு வாதத்தை கேட்காமல் இந்த படம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு 7-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி அருள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தங்கராஜ் தரப்பு வாதத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், இதுபற்றி பதில் தருமாறு தங்கராஜுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X