மீண்டும் ஏமாற்றிய எங்கள் ஆசான்!

காரணம்? பணப் பிரச்சினைதான்!
கடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் எங்கள் ஆசான். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவித்து, வெளியாகவிருக்கும் தியேட்டர்களின் பெயர்களையும் விளம்பரங்களில் குறிப்பிட்டனர்.
ஆனால் பணப் பிரச்சினை காரணமாக படம் வெளியாவது தள்ளிப் போனது.
இந்த முறை நிச்சயம் ஜூலை 11-ல் வெளியிட்டு விடுவோம் என அறிவித்தார் தயாரிப்பாளர் தங்கராசு. விஜய்காந்தும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.
ஆனால் பணப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாததால் இந்த முறையும் சொன்னது போல ரிலீசாகவில்லை எங்கள் ஆசான்.
கஜேந்திரா படத்திலிருந்து எங்கள் ஆசான் வரை விஜய்காந்த் நடித்த படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு கட்டத்தில் சிக்கலுக்குள்ளாகி பஞ்சாயத்துக்குப் போவது கவனிக்கத்தக்கது.
Comments
எங்கள் ஆசான் சினிமா தமிழ் நிதி நெருக்கடி விஜய்காந்த் விளம்பரம் cinema engal asan financial troubles publicity vijay kanth


Click it and Unblock the Notifications