சென்னை சர்வதேச பேஷன் வாரம்-அழகிகள் தேர்வு
சென்னையில் அடுத்த மாதம் சர்வதேச பேஷன் வாரம் நடைபெறவுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள புகழ் பெற்ற டிசைனர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை அரங்கேற்றப் போகிறார்கள்.
இதில் கலந்து கொள்ளும் மாடல் அழகிகளைத் தேர்வு செய்வதற்காக சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் அகில் இந்திய மாடல் அழகிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட மாடல்கள் கலந்து கொண்டு அழகு நடை போட்டனர்.
இதில் தேர்வாகும் அழகிகள்தான், சென்னை சர்வதேச பேஷன் வார நிகழ்ச்சியில் பங்கேற்கும் டிசைனர்கள் வடிவமைத்துள்ள உடைகளை அணிந்து பூனை நடை போடுவார்கள்.
அழகிகளை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் டிசைனர் ராகுல் தேவ் ஷெட்டி, பேஷன் நடன வடிவமைப்பாளர் மெஹர் பாஷின், போட்டோகிராபர் பிரவீன் தலான், அதுல் கெல்கர் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.
நேற்றைய போட்டியில் 40 அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பூனை நடையோடு அழகிகளிடம் பல்வேறு கேள்விகளும் கேட்கப்பட்டன. அதில் சரியாக செய்தவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.
டெல்லி, மும்பை, ஹைதராபாத்திலிருந்து நிறைய அழகிகள் வந்திருந்தனர்.
மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான லேகா அனந்தராமன் கூறுகையில், இந்த டெஸ்ட் வித்தியாசமானதாக இருக்கிறது. நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. மிகச் சிறப்பானதாக உணர்கிறேன். பல புதிய தோழிகள் கிடைத்துள்ளனர் என்று அழகாக சிரித்து முடித்தார்.
அழகிகள் தவிர ஆண் மாடல்களும் இதில் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications












