ஜிப்ரல்டார் அழகி கயான் அல்டோரினோ மிஸ் வேர்ல்ட் ஆக தேர்வ

By Staff

Miss world 2009
ஜோகனஸ்பர்க்: 2009ம் ஆண்டின் உலக அழகியாக ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த கயான் அல்டோரினோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

'மிஸ் வேர்ல்ட்-2009' பட்டத்துக்கான உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்றிரவு தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்தது.

இதில் இந்தியா உள்பட 112 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் இந்தப் போட்டியில் பூஜா சோப்ரா பங்கேற்றார். தொடக்கச் சுற்றுப் போட்டிகளில் பூஜா மிகவும் சிறப்பான புள்ளிகளை பெற்றார்.

இந்நிலையில் நேற்று பூஜா ஜோகன்ஸ்பர்க்கில் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல் படிக்கட்டில் இறங்கி வந்தபோது அவர் அணிந்திருந்த ஹை-ஹீல்ஸ் செருப்பு வழுக்கி கால் தடுமாறி கீழே விழுந்தார். இதனால், போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன் நடக்கும் நடனப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

இதற்கிடையே, ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த கயான் அல்டோரினோ, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு உலக அழகிக்கான பட்டம் சூட்டப்பட்டது.

இருபத்திரண்டு வயதாகும் கயான் அல்டோரினோ, மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்தவர். மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெர்லா பெல்ட்ரான் இரண்டாவது இடத்தையும், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த டட்டும் கேஷ்வர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்த ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கயான் அல்டோரினோவுக்கு, கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ரஷ்ய அழகியான கெனியாசுகி நோவா, மிஸ் வேர்ல்ட் மகுடத்தை சூட்டினார்.

3வது இடம் பிடித்த மிஸ் தென்னாப்பிரிக்கா அழகி டட்டும் கேஷ்வர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X