ரீமிக்ஸ்.. ராஜா கொடுத்த அனுமதி!

By Staff

Illaiyaraja
இசைஞானி இளையராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல் தண்ணி கருத்திருக்கு... (இளமை ஊஞ்சலாடுகிறது). எண்பதுகளின் ஆரம்பத்தில் இந்தப் பாடல் தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கியது என்றால் மிகையல்ல.

சுமாரான பாட்டைக் கூட ரீமிக்ஸ் செய்யும் இன்றைய சூழலில், இந்த சூப்பர் ஹிட் பாடலை மட்டும் விட்டு விடுவார்களா...?

மோகன்பாபுவின் மகன் மஞ்ச் மனோஜ்குமார் அறிமுகமாகும் என்னைத் தெரியுமா படத்தில் இந்தப் பாடலை முழுசாக ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். பொதுவாக இம்மாதிரி ரீமிக்ஸ் செய்பவர்கள் பாவ புண்ணியம் பார்ப்பதில்லை... அதாவது ஒரிஜினல் பாடலுக்குச் சொந்தக்காரர்களுக்கு இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. பலர் குறைந்தபட்சம் இதற்கு அனுமதி கூடப் பெறுவதில்லை.

ஆனால் இந்தப் பாடலைப் பயன்படுத்தும் முன்னர், படத்தின் நாயகன் மனோஜ்குமார், இசைஞானி இளையராஜாவிடம் முறையாக அனுமதி கேட்டிருக்கிறார்.

அதற்கு ராஜா சொன்ன பதில் என்ன தெரியுமா?

மனோஜ் குமார் இப்படிக் கூறுகிறார்:

இளையராஜா அங்கிளிடம் ஒரு நாள் போன் செய்து, அங்கிள், உங்களுடைய ஒரு பாடலை என் படத்தில் பயன்படுத்திக் கொள்ள உங்கள் அனுமதி வேண்டும்... என்றேன்.

அதற்கு இளையராஜா, "டேய், நீ என் தம்பி பையன்டா. யார் யாரோ என் பாடலை ரீமிக்ஸ் செய்து கெடுத்துக்கிட்டிருக்காங்க. என்கிட்ட கேட்காமலேயே இந்தப் பாடலை எடுத்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது... தாராளமா பயன்படுத்திக்கோ..." என ஆசீர்வாதம் செய்தார்.

அந்தப் பாடலை வெறும் ரீமிக்ஸ் செய்து ஒரிஜினல் பாடலையும், பாடகர் குரலையும் மறைக்க விரும்பவில்லை. அதைப் பாடிய மலேஷியா வாசுதேவன் குரலை அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம். எல்லாருக்கும் பிடிக்கும்... என்றார் மஞ்ச் மனோஜ்குமார்.

சூப்பர் பாட்டு மஞ்ச், 'பன்ச்' பண்ணாம பார்த்து கொடுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X