கோவாவில் ஜூலியானா ஃபைன்!

By Staff

Juliana Fine
ஒரு வழியாக கோவா படத்தின் வெளிநாட்டு நடிகை யார் என்பது முடிவாகி விட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜூலியானா ஃபைன் நடிக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்க, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உருவாகும் படம் கோவா. சினேகா இப்படத்தில் வில்லத்தனம் கலந்த ஹீரோயின் வேடத்தில் நடிக்கிறார்.

கதாநாயகர்களாக ஜெய், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், வைபவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தில் ஒரு வெளிநாட்டு நாயகி கேரக்டர் உள்ளது. இதற்கு சரியான ஆள் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தார் பிரபு.

ஜெஸிகா ஆல்பா, அமன்டா சிக்பிரைட் உள்ளிட்ட பலரையும் அணுகினர். ஆனால் எதுவும் ஒத்துவரவில்லை.

இந்த நிலையில் நியூயார்க்கைச் சேர்ந்த மாடல் - நடிகை ஜூலியானா ஃபைன் சிக்கியுள்ளார். இவர்தான் தற்போது கோவா படத்தில் நடிக்கப் போகிறார்.

தற்போது படப்பிடிப்பு தேனியில் தொடங்கியுள்ளதாம்.

கோவாவுக்கு செல்லும் நான்கு நண்பர்கள், அங்கு ஒரு வெளிநாட்டுப் பெண்ணை சந்திக்கின்றனர். அதன் பிறகு நடக்கும் திடுக் திடுக் சம்பவங்கள்தான் கோவா படத்தின் கதையாம்.

ஏற்கனவே சென்னை 600028, சரோஜா ஆகிய சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் வெங்கட் பிரபு என்பதால் கோவா படத்திற்கு இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X