'ஜெகன் மோகினி'...ராஜா தந்த இன்ப அதிர்ச்சி!

படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வெளியாகி நான்கைந்து நாட்களில் தெலுங்குப் பாடல்கள் பெரிய அளவு ஹிட். தமிழிலும் இந்தப் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கட்டிக்கிட்டா ராசாவத்தான்..., நிலவு வரும் நேரம்..., கண்மணி தேரில் இள ராஜா... பாடல்களின் இசையில் புதிய துள்ளல் தெரிகிறது.
இந்த ஆல்பத்தின் ஹைலைட் 'உன்னைவி்ட்டால் யார் எனக்கு...' என சித்ரா பாடியுள்ள பாடல்தான். சித்ராவுக்கு இன்னொரு பிரேக் தந்திருக்கிறார் ராஜா, இந்தப் பாடல் மூலம். இது ஒரு அம்மன் பாடல். படம் வெளியாகி, இந்தப் பாடல் வரும் நேரத்தில் நிச்சயம் திரையரங்குகளில் சாமி வந்தாடும் தாய்மார்கள் பற்றிய செய்திகள் தினசரிகளில் இடம்பெறக்கூடும். மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான பாடல்!
இதற்கு முன் வெளியான அழகர் மலையில் இடம்பெற்ற 'கருகமணி...' ஆரம்பித்துள்ள நிலையில், ராஜாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... ரீமிக்ஸ், குத்துவெட்டு குதறல் பாடல்களைக் கேட்டு காதில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் இசை ரசிகர்களுக்கும் உண்மையிலேயே பெரும் ஆறுதல் இந்தப் பாடல்கள்.


Click it and Unblock the Notifications











