அரவான் மூலம் தமிழுக்கு வரும் கபீர் பேடி!
வசந்தபாலனின் அரவான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரபல இந்திய - ஹாலிவுட் நடிகர் கபீர் பேடி.
சர்வதேச அளவில் பெரிதும் அறியப்பட்ட முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர் கபீர் பேடி.
அங்காடித் தெரு படத்துக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கும் படம் அரவான். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி உட்பட பலர் நடிக்கிறார்கள்.
18-ம் நூற்றாண்டு தமிழர்களின் வாழ்க்கையை, கலாசாரத்தை, காதலை சொல்லும் இந்தப் படத்துக்கு பின்னணி பாடகர் கார்த்திக் முதல்முறையாக இசை அமைக்கிறார்.
இதில் வில்லனாக நடிக்க, இந்தி நடிகர் கபீர் பேடியிடம் பேசி வந்தனர். சமீபத்தில் அவரிடம் கதை சொன்னார் வசந்தபாலன். கண்டிப்பாக நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார் கபீர் பேடி. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங் அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் வசந்தபாலன் கூறுகையில், "இந்தக் கதையைக் கேட்டபோதே அவர் மறுபேச்சின்றி நடிக்க ஒப்புக் கொண்டார். ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் அவரது பாத்திரத்துக்கு" என்றார்.


Click it and Unblock the Notifications











