விஸ்வரூபம் படத்துக்காக மீண்டும் 'கதக்' கற்ற கமல்!
அனைத்து வகை நடனங்களையும் அவர் அறிந்திருந்தாலும், குறிப்பிட்ட படத்துக்கு இந்த வகை நடனம் வேண்டும் என்றால் அதை மீண்டும் புதிதாகக் கற்றுக் கொள்ளவும் தயங்காதவர் அவர்.
சலங்கை ஒலி படத்துக்காக கதக், கதகளி போன்ற பாரம்பரிய நடனங்களை அவர் கற்றார். இப்போது மீண்டும் கதக் கலையின் நவீன வடிவங்களைக் கற்கிறார். ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும் இந்தப் பயிற்சி மூலம் தன்னை அவர் அப்டேட் செய்து கொள்கிறார்.
படத்தில் கதக் நடனம் இடம் பெறும் ஒரு பாடல் இடம்பெறுவதாலேயே இந்தப் பயிற்சியாம்.
படத்தில் கமல் ஜோடியாக பூஜாகுமார் தேர்வாகியுள்ளார். கமலின் இளைய மகள் அக்ஷரா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்
60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ரூ.55 கோடி செலவாகி உள்ளதாம். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்கா மற்றும் லண்டனில் நடக்க உள்ளது. விஸ்வரூபம் படத்துக்கு மொத்தம் ரூ.120 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. கமல் படங்களில் தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்றவை அதிக செலவில் எடுக்கப்பட்டன. அவற்றை விட பல மடங்கு அதிக செலவில் விஸ்வரூபம் தயாராகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகும் விஸ்வரூபத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications












