ஜாக்ஸனுக்கு கமல், ரஹ்மான், ஸ்ருதி இசை அஞ்சலி

வருகிற 29ம் தேதி சென்னையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலைஞானி கமல்ஹாஸனும் பங்கேற்பது இன்னொரு சிறப்பு.
ஸ்ருதியின் இசைக்குழு மைக்கல் ஜாக்ஸனின் மறக்க முடியாத பாடல்கள் சிலவற்றை வழங்கி, மறைந்த அந்த மாபெரும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துகிறது.
நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பாக ஆஸ்கர் விருது மூலம் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஏஆர் ரஹ்மானும் பங்கேற்று தனது இசை அஞ்சலியை மைக்கேல் ஜாக்ஸனுக்குச் செலுத்துகிறார்.
மேலும் சில பெரிய கலாஞர்களையும் இந்த மேடையில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த மாபெரும் இசை அஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
Comments
ar rahman இசை அஞ்சலி ஏஆர் ரஹ்மான் கமல் ஹாஸன் சினிமா தமிழ் மைக்கேல் ஜாக்ஸன் ஸ்ருதிஹாசன் cinema kamal hassan micheal jackson shruthi hassan


Click it and Unblock the Notifications