குஷ்பூவின் 'ஐந்தாம் படை'

சுந்தர்.சி.யின் முந்தைய வெற்றி படமான வீராப்பை இயக்கிய பத்ரிதான் இந்த படத்தையும் இயக்குகிறார். இவர் சுந்தரிடம் பல படங்களில் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றிவர். இந்த படத்தில் குஷ்பூவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். விவேக், நாசர், முகேஷ் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு 15ம் தேதி தொடங்குகிறது. கும்பகோணம், நெல்லை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். டி.சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகராக மாறிய பிறகு தொடர்ந்து மூன்று ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார் சுந்தர். அடுத்து ரிலீஸாகும் இவரது படங்கள் ஆயுதம் செய்வோம், தீ, பெருமாள்.
டைரக்ஷனை முழுசாவே மறந்துட்டாரோ...
Comments


Click it and Unblock the Notifications