twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ.45 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஷில்பா ஷெட்டி மீது வழக்கு!

    |

    Shilpa Shetty with Rekha
    லண்டன்: நடிகை ஷில்பா ஷெட்டியிடம் ரூ.45 கோடி நஷ்டஈடு கேட்டு, லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    ராஜ் குந்த்ரா என்ற தொழில் அதிபரை காதலிக்கும் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, சமீபத்தில் இங்கிலாந்தில் ஏராளமான கிளைகளுடன் இயங்கி வரும் டிபன்பைட்ஸ்' என்ற பாஸ்ட் புட் உணவகத்தை,காதலருடன் சேர்ந்து விலைக்கு வாங்கினார். ரூ.45 கோடி கொடுத்து, உணவகத்தின் 33 சதவீத பங்குகளை இருவரும் வாங்கியுள்ளனர். இதையடுத்து, உணவகத்தின் இணைத் தலைவராகவும் ஷில்பா பொறுப்பு ஏற்றுள்ளார்.

    இந்த உணவகத்தை நிறுவியவர் ஜமால் ஹிரானி (வயது 42). ஷில்பா ஷெட்டிக்காக, ஜமால் ஹிரானியை அவரது பங்குதாரர்களே வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டனர்.

    இதையடுத்து, ரூ.45 கோடி நஷ்டஈடு கேட்டு, ஷில்பா ஷெட்டி மீது லண்டன் ஐகோர்ட்டில் ஜமால் ஹிரானி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து ஜமால் ஹிரானி கூறியதாவது,

    என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி எனது கூட்டாளிகள் என்னை வலுக்கட்டாயமாக நீக்கி விட்டனர். அப்போது மூடப்பட்ட உணவகம், பிறகு வேறு பெயரில் திறக்கப்பட்டது. தற்போது இந்த உணவகத்தில் ஷில்பா ஷெட்டி முதலீடு செய்திருப்பதாக அறிந்தேன். அவருக்காகத்தான் என்னை நீக்கி உள்ளனர்.

    ஆகவே, ரூ.11 கோடி நஷ்டஈடு கேட்டு, நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொழிற்சாலை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தேன். தற்போது, ரூ.45 கோடி நஷ்டஈடு கேட்டு லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். உணவகத்தில் நான் முன்பு வைத்திருந்த 30 சதவீத பங்குகளின் அடிப்படையில் இவ்வழக்கை தொடர்ந்துள்ளேன் என்றார்.

    ஜமால் ஹிரானியின் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் உணவகத்தை வாங்குவதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களுக்காக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும்" என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X