பாடலாசிரியர்களுக்கு ஒழுங்கான சம்பளம் இல்லை!-சினேகன்

சென்னையில் நடந்த ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சினிமாவைப் பொறுத்தவரை பாடல்கள் என்னதான் முக்கியத்துவம் கொண்டவையாகத் திகழ்ந்தாலும், அதை எழுதுபவர்களுக்கு ஒழுங்கான சம்பளம் கிடைப்பதில்லை.
சம்பளத்தைப் பொறுத்தமட்டில் உதவி டைரக்டர்களும் இந்தப் பிரிவில் வந்து விடுகிறார்கள். இரு தரப்பினருக்குமே முறையான கெளவுரவமும் கிடைப்பதில்லை.
பாடல் ஆசிரியர்கள் சம்பளம் கேட்டு அலைய வேண்டியிருக்கிறது. உதவி டைரக்டர்கள் இரவு- பகலாக வேலை பார்த்தாலும், அதற்குரிய சம்பளம் தருவதில்லை.
குறிப்பிட்ட இந்தப் படத்தின் பாடல் ஆசிரியருக்கு அந்த மாதிரி அனுபவம் ஏற்படாதது ஆறுதல் அளிக்கிறது என்றார்.
Comments


Click it and Unblock the Notifications