twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''பெரியார் முன் கை..அண்ணா முழங்கை''

    By Staff
    |

    Vaali with Karunanidhi
    முதன்முதலில் இந்த சமுதாயத்தின் அவலங்களை சுட்டிக்காட்ட கையை நீட்டியவர் பெரியார். பெரியார் முன் கை என்றால் அதைத் தொடர்ந்து நீண்ட முழங்கை அண்ணா. அந்த முன் கை, முழங்கை இரண்டும் இணைந்த முழுக் கை தான் முதல்வர் கருணாநிதி என்று பாடலாசிரியர் வாலி கூறினார்..

    அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. இதையொட்டி 'கலைஞர் டி.வி.' சார்பில் கருத்தரம் நடைபெற்றது.

    இதற்கு தலைமை தாங்கி கவிஞர் வாலி பேசுகையில்,

    முதன்முதலில் இந்த சமுதாயத்தின் அவலங்களை சுட்டிக்காட்ட கையை நீட்டியவர் பெரியார். பெரியார் முன் கை என்றால் அதைத் தொடர்ந்து நீண்ட முழங்கை அண்ணா. அந்த முன் கை, முழங்கை இரண்டும் இணைந்த முழுக் கை கலைஞர் கருணாநிதி.

    அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் நாணையத்தை வெளியிட முதல்வர் ஏற்பாடு செய்திருக்கிறார். அண்ணா வாழும் நாள் வரை நாணையத்துடன் வாழ்ந்தார். ஆகவே தான் அவருக்கு 5 ரூபாய் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகிறார் கருணாநிதி என்றார்.

    பி்ன்னர் கருணாநிதி அண்ணா விருது பெற பெரிதும் காரணமாய் இருப்பது பகுத்தறிவு கொள்கை என்று மந்திரி அமைச்சர் ராசாவும், ஏழைகளுக்கு உழைப்பதுதான் என்று அமைச்சர் பொன்முடியும், பேச்சாற்றல்தான் என்று மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகனும், எழுத்தாற்றல் தான் என்று கவிஞர் வைரமுத்துவும், கட்டுக்கோப்பாய் வைத்திருத்தல்தான் என்று முன்னாள் அமைச்சர் தென்னவனும், அரசியல் நாகரீகம்தான் என்று சுப.வீரபாண்டியனும் பேசினார்.

    இரண்டை மணி நேரம் நடந்த இந்த கருத்தரங்கை முதல்வர் கருணாநிதியும் நடிகர் ரஜினியும் கண்டுகளித்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X