மன்மதன் அம்பு படத்துக்கு யு!
காமம் ததும்பும் பாட்டு, பாலுணர்வுக் குறியீடான தலைப்பு என பலரது எதிர்ப்பையும் ரிலீசுக்கு முன்பே சம்பாதித்துவிட்ட கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதன் மூலம் இந்தப் படம் அனைவரும் பார்க்கத்தக்கதே என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 23-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகும் மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாஸன்- த்ரிஷா, மாதவன், சங்கீதா நடித்துள்ளனர். ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். ஆனால் அவர் இந்தப் படத்தை வெளியிடவில்லை. ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது.
Comments


Click it and Unblock the Notifications