தள்ளிப் போன மரியாதை!

தேமுதிக முதல் முறையாக லோக்சபா தேர்தலை சந்திக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவரான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்துள்ள படம் மரியாதை.
இப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர் விஜயகாந்த் ரசிகர்கள். விஜயகாந்த்துடன், அம்பிகா, மீனா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
வானத்தைப் போல படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் இப்படத்தில் விஜயகாந்த்துடன் இணைந்துள்ளார் இயக்குநர் விக்ரமன்.
இப்படத்தில் அரசியல் இல்லை என விஜயகாந்த் கூறியுள்ள போதிலும், அவரது அரசியல் இமேஜை தூக்கி நிறுத்தும் படியான கேரக்டரில் அவர் நடித்திருப்பதாக கருதப்படுவதால், விஜயகாந்த் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு (ஏப்ரல் 17), முன்பாக ஏப்ரல் 10ம் தேதியே இப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போது 24ம் தேதிக்கு ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











