தமிழுக்கு வரும் 'மின்னாமினி கூட்டம்'

Meera Jasmine in Kadhal Seivom
மலையாளத்தில் வெளியான 'மின்னாமினி கூட்டம்' படம் தமிழில் 'காதல் செய்வோம்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களுக்கு மத்தியில், அவ்வப்போது சில நல்ல படங்கள் பிற மொழிகளிலிருந்து எட்டிப் பார்க்கும். அவையெல்லாம் பாலைவனத்து சோலை போல தமிழ் ரசிகர்களை மகிழ்விப்பதும் உண்டு.

அந்த வகையில் மலையாளத்தில் வெளியான மின்னாமினிக் கூட்டம் இப்போது தமிழுக்கு டப் ஆகி வருகிறது.

ஒரு தகவல் தொழில்நுட்ப என்ஜினியரின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வித்தியாசமான படத்தின் கதாநாயகனாக 'அஞ்சாதே' நரேன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி சேர்ந்திருப்பவர் மீரா ஜாஸ்மின்.

இவர்களது காதலை சேர்த்து வைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களாக ஜெயசூர்யா, சாய்குமார், ரோமா, சம்விருத்தா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவர் கமல். வசனம் சாய் ஸ்ரீனிவாஸ்.

பிஜூபால் இசையமைக்க, மனோஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சச்சின் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஜனார்த்தனன் படத்தை தயாரிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X