கன்னடத்தில் பிரபு

By Staff

Prabhu with Manthra
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புதல்வரும், நடிகருமான பிரபு முதன் முறையாக கன்னடப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

பிரபுவின் பள்ளிப் படிப்பெல்லாம் பெங்களூரில்தான். மேலும் நடிகர் திலகத்தின் மகன் என்பதால், பெங்களூர், பிரபுவுக்கு இன்னொரு தாய் வீடு போல.

கன்னடத்தில் நன்றாகப் பேசக் கூடிய திறமை படைத்தவர் பிரபு. இருந்தாலும் இதுவரை ஒரு கன்னடப் படத்திலும் அவர் நடித்ததில்லை. இந்த நிலையில் முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கப் போகிறார் பிரபு.

படத்திற்குப் பெயர் பாஸ். சத்யா இயக்குகிறார். நவ்யா நாயர், தர்ஷன் ஜோடிகளாக நடிக்கின்றனர்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பிரபு. படப்பிடிப்பு தற்போது மைசூரில் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சிவாஜி கணேசன் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் உருவான ஸ்கூல் மாஸ்டர் என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். இப்போது தந்தை வழியில் பிரபுவும் கன்னடம் பேசப் போகிறார்.

தமிழில் தற்போது தந்தை மற்றும் குணச்சித்திர வேடங்களுக்கு மாறி விட்டார் பிரபு. அஆஇஈ படத்தில் அவர் நடித்துள்ள தந்தை வேடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இதுபோன்ற வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் பிரபு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X