டொரண்டோ பட விழாவில் கஞ்சீவரம்!

By Staff

Priyadarshan with wife Lisi
பிரகாஷ்ராஜை நாயகனாக்கி விருதுக்காகவே ப்ரியதர்ஷன் எடுத்து வரும் தமிழ் படம் கஞ்சீவரம்.

தமிழகத்தில் நெசவுத் தொழிலின் பாரம்பரியத்தையும், அதன் இன்றைய நிலையையும் உணர்த்த எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் கனடாவி்ன் டொரன்டோ நகரில் நடைபெற உள்ள உலகப் படவிழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ப்ரியதர்ஷன், இந்தப் படத்தின் மூலம் சர்வதேச அளவில் நெசவாளர் பிரச்சினையை கொண்டு செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்தியாவிலும் படத்தை வெளியிடுவோம். ஆனால் அதற்கு இன்னும் நாளாகும்.

டொரண்டோ திரைப்பட விழா, மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. இதில் பங்கேற்கும் ஒரே திரைப்படம் கஞ்சீவரம்தான் என்றார்.

இதி்ல் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார்.

ரிலீசாகாத படங்கள் மட்டுமே இந்த உலகப் பட விழாவில் பங்கேற்க முடியும் என்பதால், கஞ்சீவரம் இன்னமும் இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படவில்லை.

காஞ்சிபுரம் என்ற பெயர்தான் மக்களால் பரவலாக கஞ்சீவரம் என அழைக்கபடுகிறது. உலகிலேயே சீனாவுக்கும் முந்தைய பட்டு நெசவுப் பாரம்பரியம் கொண்ட கலைப் பிரதேசம் இந்த காஞ்சிபுரம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X