twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சிபாரிசு!

    By Staff
    |

    Slumdog Millionaire movie still
    ஹாலிவுட்டின் மிகப் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 66-வது கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரைகள் வெளியாகியுள்ளன.

    இதில் இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் ('Slumdog Millionaire') என்ற படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.

    ஒரிஜினல் இசைக்காக அவரது பெயரும் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

    சிறந்த படம், சிறந்த டைரக்டர் (டேனி பாயல்), சிறந்த திரைக்கதை (சிமோன் பியூபோ) ஆகிய பிரிவில் கோல்டன் குளோப் விருதுக்காக ஸ்லம்டாக் மில்லியனர், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    விருதுக்குரியவர்கள் இறுதிப் பட்டியல் ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது.

    இந்தப் படம் மும்பையைச் சேர்ந்த வீதிச் சிறுவன் ஒருவனின் கதையை விவரிக்கிறது. ஒரு ஏழைச் சிறுவன் கோன்பனேகா குரோர்பதி மாதிரி ஒரு ஷோவில் பங்கேற்று மாபெரும் பணக்காரனாகும் கதை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X