twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சன் டிவியில் ராமாயணம்!

    By Staff
    |

    என்டிடிவி இமேஜின் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

    திமுகவின் உறவு வலையிலிருந்து சன் டிவி வெளியே வந்த பிறகு அதில் ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளன. முதலில் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோத்சவம் தொடர்பான நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்பியது.

    இதையடுத்து வாரந்தோறும் ஒரு அரை மணி நேர ஆன்மீக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ராமாயணம் தொடரை ஒளிபரப்பவுள்ளது சன் டிவி.

    என்டிடிவி இமேஜின் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் தொடரை தமிழில் டப் செய்து ஒளிபரப்பவுள்ளனர். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த ராமாயணம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

    வால்மீகி மற்றும் துளசிதாரின் ராமாயணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. சாகர் ஆர்ட்ஸ் இந்த தொடரை தயாரித்துள்ளது. இதே நிறுவனம்தான் முதன் முதலில் தூர்தர்ஷனில் ராமாயணத்தை ஒளிபரப்பியது என்பது நினைவிருக்கலாம்.

    குர்மீத் செளத்ரி ராமராக நடித்துள்ளார். தேபினா பானர்ஜி சீதையாக நடித்துள்ளார். லட்சுமண் வேடத்தில் அங்கித் அரோராவும், பரதனாக விஜய் பாட்டியாவும், சத்ருகனாக லலித் நேகியும் நடித்துள்ளனர்.

    ரவீந்திர ஜெயின் இசையமைத்துள்ளார். ஓமங் குமார் கலை பொறுப்பை ஏற்றுள்ளார்.

    நிஷா சாகர் உடை வடிவமைப்பை கவனிக்கிறார். கவிதா கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் வத்கர் முகப்புப் பாடலை பாடியுள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X