அமிதாப்பை நம்பி 100 கோடி!

இந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த சனிக்கிழமை தனது 66-வது பிறந்த நாளை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடினார். அப்போது திடீரென்று கடும் வயிற்று வலி ஏற்பட்டு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அமிதாப்பின் உடல் நலம் தேறி வந்தாலும் அவரால் சில மாதங்களுக்கு நடிக்க முடியாது என்று டாக்டர்கள் கூறியுள்ளதால் தயாரிப்பாளர்கள் செய்தவதறியாது திகைக்கிறார்கள்.
லீனா யாதவின் டீன் பட்டி படத்தில் அமிதாப் நடித்து வருகிறார். இதில் ஜாக்கி ஷெராப், மாதவன், ரீமா சென் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த ஷூட்டிங்கின் போதுதான் பிறந்தநாளுக்காக படப்பிடிப்புக்கு இடையில் வீட்டுக்கு வந்தார் அமிதாப்.
அதற்குள் இப்படியாகிவிட்டது. மேலும் ஷூ பைட் படத்திலும் அமிதாப் நடித்து வருகிறார்.
'இந்த படத்திற்காக ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் அமிதாப்.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படமான ஷப்த் இன் 2005 படத்தை தொடங்க இருந்தோம். அமிதாப் சிகிச்சையில் இருப்பதால் படத்தின் பட்ஜெட் ரூ.25 கோடிக்கு மேலாகும் என்று நினைக்கிறேன்' என்றார் தயாரிப்பாளர் யாதவ்.
ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ரூ.450 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகும் அலாதீன் படத்திலும் அமிதாப் நடித்துள்ளார். முதலில் ரமேஷ், ரோஹன் சிப்பி ஆகியோர் தயாரித்தனர். பின்னர் கிஷோர் லீலாவுக்கு கைமாறியது இந்தப் படம்.
இதற்கிடையில் அமிதாப்புக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களும் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே டைம் மெஷின், பாக்கெட் மார், ஆங்கேன் 2, பைரவி, கோமகடா மாரு, ஸ்ட்ரக்லர், தலிஸ்மான் மற்றும் அவரது சொந்த தயாரிப்பான தி லெஜன்ட் ஆப் குணால் ஆகிய படங்களில் நடிக்க அமிதாப் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தப் படங்களில் அவரை நம்பி செய்யப்பட்டிருக்கும் முதலீட்டின் அளவு ரூ. 1 பில்லியன்!
திரும்ப அதே வேகத்துடன் நடிக்க வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
நம்பிக்கை பலிக்கட்டும்!


Click it and Unblock the Notifications











